அம்பலன்கொட, மதுனாகல, கெலேபத பிரதேசத்திலுள்ள விகாரையில் தேரர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
கொலன்னாவ சாராலங்கார (வயது 69) என்ற தேரரே இவ்வாறு தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த பிக்கு மதுனாகல விகாரைக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வருகை தந்த ஒருவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.