இஸ்ரேல் – துருக்கி உறவுகளை சீர் செய்வது தொடர்பான சட்ட மூலம் சமர்ப்பிப்பு.

இஸ்ரேல் உடனான உறவுகளை சீர் செய்வது தொடர்பான சட்ட மூலத்தை துருக்கி அரசாங்கம் நேற்று புதன் கிழமை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு காஸா மீது இஸ்ரேல் விதித்திருந்த முற்றுகையை தகர்க்கும் நோக்கில் உதவி பொருட்களுடன் காஸாவை நோக்கி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றம் அடைந்தது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 10 துருக்கிய சமூக ஆர்வலர்கள் உடன் கொல்லப்பட்டனர்.

துருக்கி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மேற்படி சட்டமூலம் அமலுக்கு வந்து 25 நாட்களில், தல் அபீப் 20 மில்லியன் இழப்பீடு வழங்குவதோடு, காஸா மின்சாரம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட காஸா மக்களின் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது