ரியோ ஒலிம்பிக்கில் மற்றுமொரு தங்கம் வென்று உசேன் சாதனை.

ரியோ ஒலிம்பிக் 200 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் பந்தய இலக்கை 19. 78 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

ரியோ ஒலிம்பிக்கில் உசைன் வென்றுள்ள 2வது தங்கம் இதுவாகும். கனடாவின் ஆன்ட்ரியா டி கிரஸ்ஸி 20.02 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றார். பிரான்சின் கிரிஸ்டோபே லீமெட்ரீ 20.12 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.

ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் ஹார்ட்டிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட் இத்துடன் சேர்த்து 8 தங்கம் வென்றுள்ளார்.