உசேன் போல்டுடனான பிரேசில் மாணவியின் அட்டகாசம் வைரலாகிறது.

ரியோ ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் தடகள பிரிவில் 4X100மீ ரிலே ஓட்டத்தில் கடைசி 100மீ ஓட்டத்தில் அபாரமாக ஓடி தங்கப்பதக்கம் வென்றார் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்.

இதன்மூலம் 120 ஆண்டுகால நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ. மற்றும் 200 மீ 4X100மீ தொடர் ஓட்டங்களில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

மூன்று ஒலிம்பிக் போட்டிகள், 3 தடகள ஓட்டப்பந்தயங்கள், 3 தங்கங்கள் என்று டிரிபிள் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுவதையும் அறிவித்துள்ளார். இந்நிலையில் 30 வயதை எட்டியுள்ள இவர், தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

பிரேசில் மாணவியான Jady Duarte (20) என்பவருடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

படுக்கையில் வைத்து உசைன் போல்ட் இந்த மாணவிக்கு முத்தம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள Jady, இது உசைன் போல்ட்டின் பிறந்தநாள் கொண்டாட்டம் என கூறி வாழ்த்தியுள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் வாட்ஸ் ஆப் மற்றும் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஒலிம்பிக் நிறைவு விழாவை முன்னிட்டும், இவர்கள் மது விருந்து, ஆட்டம் கொண்டாட்டம் என கலக்கியுள்ளனர்.