நாளை உலக சாதனை படைக்க வாய்ப்புப்பெற்றுள்ள சந்திமால்..

இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிற்கு எதிராக இலங்கை அணி சார்பில் சந்திமால் 80ஓட்டங்களை பெற்று, அரைச்சதம் விளாசவுள்ளமை  யாவரும் அறிந்ததே.

இது அவரது தொடர்ந்து பெற்ற 5வது அரைச்சதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சந்திமால் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் தொடர்ந்து  4அரைச்சதங்களை விளாசி சாதித்திருந்தார்.

சனத் ஜயசூரிய,திலகரத்ன டில்ஷான் மற்றும் குமார் சங்ககார  ஆகியோர் இலங்கை அணிக்காக தொடர்ந்து ஆடி 5அரைச்சதங்களை விளாசியிருக்கின்றனர்.

சந்திமால் நாளைய போட்டியில் அரைச்சதத்தினை பூர்த்தி செய்வாராயின் உலகில் அவருக்கு ஆட்டமிழக்காது தொடர்ந்து ஆடி  அரைச்சதம்  வாங்கிய 6வது வீரராக பதிவாகவுள்ளார்.

அதற்கு முன்னதாக, கோடன் கிரிநிட்ஜ், என்ரா  ஜோன்ஸ்,மாக் வோ , மொஹம்மத் யூசுப் மற்றும் கேன் விலியம்ஸ் ஆகியோரே இவ்வாறு திறமையினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

எவ்வாறாயினும், கடந்த போட்டியில் சந்திமாலின் நெஞ்சில் பந்து தாக்கியமையினால் நாளைய போட்டியில் அவர் பங்கு கொள்வது குறித்து இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.