கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவத்தார்.
கிழக்கு பல்கலைக்கழக மருத்துபீட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடி பெண்கள் விடுதி கட்டிடத்தில் அமைச்சரை சந்தித்து நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே இதனை தெரிவித்தார்.
அரசடி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பல்கலைக்கழக கற்பித்தல் பிரிவை பூர்த்தி செய்தல், மருத்துவ பீடத்திற்கான நிரந்தர கட்டிடத்தை பிள்ளையாரடியில் நிர்மாணித்தல், விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைபாடுகளை மாணவர்கள் இதன்போது முன்வைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மருத்துவ பீட கற்பித்தல் பிரிவை பூரணப்படுத்த 130 மில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து இவற்றை தீர்ப்பதாகவும் பிள்ளையாரடியில் நிரந்தர மருத்துவ பீட கட்டிடத்தை குவைட் அரசின் நிதியிலிருந்து 2017ல் ஆரம்பிக்க முடியுமெனவும் விரிவுரையாளர் பற்றாக்குறை பல்கலைகழக மாணியங்கள் ஆணைக்குழுவுடன் பேசி முடிவு செய்யவேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.