இலங்கை அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் சங்கக்காரவை தெய்வத்திற்கு நிகர் என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் ட்விட்டர் தளத்தில் பதிவாக்கியமை வைரலாக பரவி வருகின்றது.
சங்கக்கார தற்போது இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் அணியில் சர்ரே அணி சார்பில் ஆடி வருகிறார். அதே அணியின் பந்துவீச்சாளரான ஸ்டுவட் மேகர் என்பவராலேயே குறித்த ட்விட்டர் பணிவிடை பரவலாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 18ம் திகதி குறித்த பணிவிடை பதிவாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டுவட் மேகர் இங்கிலாந்து அணியின் சர்வதேச மற்றும் இருபதுக்கு 20 அணிகளுக்கான வேகப்பந்து பந்து வீச்சாளராக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே, லண்கர்ஷயர் மற்றும் சர்ரே அணிகளுக்கு இடையில் நேற்று(23) நடைபெற்ற போட்டியில் ஸ்டுவட் வீசிய பந்தினை சங்கா சமார்த்தியமாக கைப்பற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த வீடியோ இணைக் காண;
[youtube url=”https://www.youtube.com/watch?v=6iOw7oLw-a4″ width=”560″ height=”315″]