அமைச்சரின் மகனுக்கு இரு தலைவர் பதவிகளும் மூன்று அரச வாகனங்களும்

மேல்மாகாண அமைச்சர் ஒருவர் தனது அமைச்சுக்குரிய இரண்டு நிறுவனங்களில் தனது மகனை தலைவராக நியமித்துள்ளார்.

அமைச்சரின் மகன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளராகவும் பணியாற்றி வருவதுடன் அரசாங்கத்திற்கு சொந்தமான மூன்று வாகனங்களையும் பயன்படுத்தி வருவதாக மாகாண நிறுவனம் ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் மகன் தலைவராக பதவி வகிகும் ஒரு நிறுவனம் அதிகார சபை எனவும் மற்றைய நிறுவனம் நிதி தொடர்பான விடயங்களை கையாளும் நிறுவனம் எனவும் கூறப்படுகின்றது.

குறித்த மேல்மாகாண அமைச்சர், கடந்த வாரம் ஜனாதிபதியால் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சரின் மகன் அரசியல் நெருக்கம் கொண்ட இரண்டு பேருக்கு நிறுவனங்களில் உயர் பதவிகளை வழங்கியுள்ளதுடன் நிறுவனத்தில் பணியாற்றும் 60 வயதை பூர்த்தி செய்த இரண்டு பேருக்கு சேவை நீடிப்பையும் வழங்கியுள்ளார்.

குடும்ப ஆட்சிக்கு எதிராக செயற்பட்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மாகாண அமைச்சர் ஒருவரின் மகன் இரண்டு தலைவர் பதவிகளை வகித்து கொண்டு, மூன்று அரச வாகனங்களை பயன்படுத்துவது ஆச்சரியத்திற்குரியது என நிறுவனங்களின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.