தோல்வியை அடுத்து ஸ்மித் மீளவும் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பியழைப்பு.

நேற்றைய தின தோல்வியினை அடுத்து அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இனை மீளவும் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அழைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதன்படி, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மீதமுள்ள போட்டிகளான ஒருநாள் போட்டிகள் 3மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் 2இற்கும் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக முதல்தர துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய தேர்வுக் குழுவின் பிரதானி ரோட் மாஷ் கூறுகையில்; அடுத்துவரும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கு ஆயத்தமாக ஸ்மித் இற்கு ஓய்வு அவசியம். அதனாலேயே அவர் மீளவும் திருப்பியழைக்கப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.