எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிலை கையாக மாறுகிறது..

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தற்போதைய வெற்றிலைச் சின்னத்தை நீக்கிவிட்டு பழம்பெரும் சின்னமான கை சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

குருநாகல் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

வெற்றிலைச் சின்னத்தை நீக்கிவிட்டு கை சின்னத்தை மீண்டும் பயன்படுத்தி தேர்தல்களை சந்திப்பது குறித்து முன்னணியின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கை சின்னத்தை பயன்படுத்துவதற்கான பெரும்பான்மை விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை செயற்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.