‘என்னை பிசாசாக்க முயற்சிக்க வேண்டாம்’ – நாமலிற்கு மேயர் பதிலடி!

ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் விளையாட்டுத் துப்பாக்கி (Sellam Pistola) மேயர் ஹிராஜ் ரவீந்திர பெர்ணான்டோவுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்குமாறு நாமல்ராஜபக்ஸ ரோஹித்த அபேகுணவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.

நாமல் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்திருந்த போது ரோஹித்த அபேகுணவர்தன நாமலை பார்வையிட சென்றுள்ளார். இதன்போதே நாமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவர்களின் இந்தத் திட்டத்தை கேள்வியுற்ற கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹிராஜ் ரவீந்திர பெர்ணான்டோவிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, உடனடியாக ரோஹித்த அபேகுணவர்தனவின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய ஹிராஜ்ர வீந்திர பெர்ணான்டோ,

“மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினரே, என்னை தாக்கும் வகையில் எனக்கு எதிராக ஊடகவியலாளரிடம் குரல் பதிவு (voice cut) கொடுக்க போகின்றீர்களா” என அவரை அச்சுறுத்தியுள்ளார்.

நாமலின் பேச்சை கேட்டுக் கொண்டு தனக்கு எதிராக எந்த வார்த்தையையும் பேசினால், உடனடியாக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறையிடுவேன் என ஹிராஜ் தெரிவித்துள்ளார்.

“இது மட்டும் நிகழ்ந்தது என்றால்,பின்னர் என்னுடைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு நீயும், நாமலும் கூறினீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்குவேன்” எனவும் ஹிராஜ்ர வீந்திர பெர்ணான்டோ எச்சரித்துள்ளார்.

”என்னை பிசாசாக்க முயற்சிக்க வேண்டாம்” எனவும் முன்னாள் விளையாட்டுத் துப்பாக்கி (Sellam Pistola) மேயர் ஹிராஜ் ரவீந்திர பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த எச்சரிக்கையை கேட்ட ரோஹித்த அபேகுணவர்தன, வெலிக்கடை சிறைச்சாலை முன் நின்ற ஊடகவியலாளர்களை புறக்கணித்து விட்டு சென்றுள்ளார்.

இதேவேளை அண்மையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெலியத்த அமைப்பாளராக ஹிராஜ்ரவீந்திர பெர்ணான்டோ தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.