எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிடுவது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்தால், தமது தரப்பினர் அதற்கு இணங்குவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்கு ஒரு நிபந்தனை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடையாளத்தை பாதுகாத்து கைச்சின்னத்தில் போட்டியிடுவது மகிழ்ச்சிக்குரியது. எனினும் கைச்சின்னத்துடன் யானைச் சின்னம் சேர்ந்திருப்பதே பிரச்சினைக்குரியது.
கைச்சின்னத்தை யானையின் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு வாக்கு கேட்கச் சென்றால், கட்சியினர் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் ரஞ்சித் செய்சா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைச்சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, மாற்றப்பட வேண்டிய கட்சியின் சின்னமில்லை, தலைமைத்துவத்தையே மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.