மாலபே – இசுருபுர பகுதி வீடொன்றில் பெண்ணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
நேற்று(27) இரவு 10.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, அதுருகிரிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்த குறித்த பெண் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் 45 வயதாக பெண் எனத் தெரியவந்துள்ளது.