சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்- முன்னாள் பி.ச. உறுப்பினர் கைது

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் களுத்தறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சுசில் பத்மசிரி என்பவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மாலை நேரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு  பிரத்தியேக வகுப்பையும் நடாத்தி வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவந்துள்ளதாவது,

பிள்ளை கடந்த ஒரு மாத காலமாக மாலை நேர வகுப்புக்கு சென்று வந்துள்ளார்.

இதன்போது சிறுவனுக்கு பல்வேறு பாலியல் தொல்லைகளை குறித்த சந்தேக நபர் மேற்கொண்டு வந்துள்ளார்.

சிறுவன் இது குறித்து தாயிடம் தெரிவித்த போதே தாய் நேற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.