இலங்கை கிரிக்கட்டின் தற்போதைய நிர்வாகத்தில் வீரர்களை விற்று பணம் சம்பாதிக்கும் மோசடி இடம்பெறுவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று(28) கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு பயிற்சி முகாம் ஒன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சேவ்த ஸ்போட் அமைப்பு 7 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்துள்ள பயிற்சி முகாம் நேற்று நாள் முழுவதும் கம்பஹா – ஊராபொல மத்திய மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.