அவமானப்படுத்திவிட்டார் நாமல்

நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கு ஏற்புடைய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்வகையிலான தேர்தல் முறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் அஜித்பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

அங்குருவாதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுஉரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் தொடர்பாகவும் பிரதி அமைச்சர் கருத்துதெரிவித்துள்ளார்.

தாம் சிறையில் இருந்த போது, அன்னம் சின்னத்திற்கு வாக்குகள் வழங்கிய யாரும்சிறையில் இருக்கவில்லை என்று நாமல் ராஜபக்ஸ சிறைக்குச் சென்று வந்த பின்னர்அது தொடர்பில் தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்ட போது கருத்துவெளியிட்டிருந்ததாக அமைச்சர் குறிபிட்டுள்ளார்.

மேலும், மஹிந்த ராஜபக்ஸவுக்கு வாக்குகளை வழங்கியவர்களே சிறையில் இருப்பதாகவும்மறைமுகமாக தெரிவித்திருந்ததாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் சுதந்திர கட்சியினரை அவமானப்படுத்தும் வகையில் நாமல் கருத்துவெளியிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.