ரிவிர செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று கம்பஹா பிரதான நீதவான் காவிந்தா நாணாயக்காரவின் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே குறித்த நபரை எதிர்வரும் மாதம் 9ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் இதன் போது கோரியிருந்த நிலையில் , நீதவான் அதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த இராணுவ புலனாய்வு அதிகாரி ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.