ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று..

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(30) கூடவுள்ளது.

இன்றிரவு 7.00 மணியளவில் கொழும்பு 7 மஹகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் குறித்த இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

கட்சியின் 65ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு ஏற்பாடுகள் குறித்தும் பேசப்பட உள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.