இலங்கை அணி பெற்றிருந்த ஒருநாள் வரலாற்று சாதனையினை இங்கிலாந்து அணி தகர்த்தெறிந்தது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று(30) இடம்பெற்ற சாதனைக்குரிய மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து 169 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 444 ஓட்டங்களைப் பெற்றது.

இதுவே ஒருநாள் போட்டியொன்றில் ஒரு அணி பெற்ற அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்னர் நெதர்லாந்துக்கு எதிராக 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 443 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணி, இந்த சாதனையைக் கொண்டிருந்தது.

50 ஓவர்களில் 445 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 42.4 ஓவர்களில் 275 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து சார்பாக 171 ஓட்டங்களைப் பெற்ற அலக்ஸ் ஹேல்ஸ் ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=lCzXvkgl4_A” width=”560″ height=”315″]