பேரூந்து – வேன் ஒன்றோடொன்று மோதியதில் நால்வர் பலி..

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல – தொலமகொல்ல பிரதேசத்தில் இன்று(02) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலியாகினர்.

சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்றும், பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதிலேயே குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள், தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 3 பெண்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.