ஆஸி அணியுடனான தோல்வியினை அடுத்து, மாலிங்க மீளவும் பயிற்சியில்..

காலில் காயம் பட்டு உபாதைக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த மலிங்க, தான் இலங்கை அணியின் தேவைக்காக பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

“ஆம், நான் ஓட ஆரம்பித்துள்ளேன். நான் இயன்றளவு பந்து வீசவும் ஆரம்பித்துள்ளேன். நான் விளையாடுவதா இல்லையா என தீர்மானிப்பது எனது உடற்தகைமையினை பொருத்தே ஆகும். நான் சுமார் 10மாதமாக கிரிக்கெட் ஆடவில்லை. 10 மாதம் ஓய்விலிருந்த என்னால் திடீரென கிரிக்கெட் ஆடவும் முடியாது. என்றாலும் தனியாக பயிற்சியினை  மேற்கொண்டுள்ளேன். இது இலங்கைக்குரிய அணி, எனக்கான சொந்த அணி இல்லை. கிரிக்கெட் குறித்த ஆர்வத்தினால் தான் காலிலுள்ள உபாதையினையும் கருத்திற்கொண்டு பயிற்சிகளுக்கு களமிறங்கியுள்ளேன். நாட்டின் அணிக்காக நான் தேவைப்பட்டால் என்னை தேர்வு செய்வார்கள். அதல்லாது; நாட்டின் அணிக்கு தான் தேவை என தானாக முன்வருவதில்லை” எனத் மேலும் தெரிவித்துள்ளார்.