திலகரத்ன டில்ஷான் கடந்த காலங்களில் இடம்பெற்ற மறக்க நினைக்கும் நினைவுகளை ஞாபகப்படுத்தி கருத்துத் தெரிவிக்கையில்..
மதியம் 12.00 மணிக்கு தலைமையிலிருந்து விலகுமாறு அழைப்பு வந்தது.
“அணித்தலைமையின் மேலுள்ள வெறுப்பில் நான் விலகவில்லை. ஏனெனில், எந்தவொரு சவாலாக இருந்தாலும் ஓராண்டு செல்லுகையில் அணியினை நல்லதோர் நிலைமைக்கு கொண்டு வந்திருந்தேன். நாம் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தோம். ஒருநாள் போட்டிகளில் வெல்ல முடியாமல் போனது காலநிலையினாலாகும். அவ்வாறு வெற்றிக்களிப்பில் இருக்கும் போது, திடீரென கிரிக்கெட் தேர்வுக்குழுவில் பல மாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.
தாம் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் போதே சரியாக அந்நாட்டு நேரப்படி மதியம் 12.00க்கு இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஆம், தேர்வுக்குழுவின் செயலாளர் அசந்த த மேல் அவர்கள் கூறியதாவது; தலைமையிலிருந்து விலகுங்கள்.. நாம் வேறொரு தலைவரை நியமிக்கவுள்ளோம், என தெரிவித்தார். அதற்கான காரணம் ஏன் என நான் கேட்கவுமில்லை. விரும்பிய தீர்மானங்களை எடுக்குமாறு கூறினேன்..
அதன் பிற்பாடு ஒரு மணித்தியாலத்தினுள், தான் தலைமையிலிருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதமொன்றினை அனுப்பினேன். ஆனால், எனக்கு என்ன காரணம் என நினைக்கவும் முடியவில்லை. நாம் அக்காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்காவினை தோற்கடித்தோம். அணியுடன் சேர்ந்து திறமையினை வெளிக்காட்டும் சந்தர்ப்பம் பார்த்து திடீரென விலகுமாறு கூறியதினை இன்னும் நம்பமுடியாதுள்ளது. அதன் பிற்பாடு மஹேல மீண்டும் தலைமைக்கு வந்தார். அதன் பிற்பாடு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தும் அதிலிருந்து விலகி நான் குடும்பத்துடன் எனது பிரச்சினை குறித்து கதைத்து ஆறுதலடைந்தேன்..”
2007 தொடக்கம் என்னுடன் சிலர் கதைக்கமாட்டார்கள்..
“இலங்கை அணி வீரர்களில் சிலர் என்னுடன் முரண்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர்.. தற்போதும் அணியிலுள்ள சில வீரர்கள் 2007ம் ஆண்டு முதல் தன்னுடன் பேசுவதில்லை. எனினும், மைதானத்தினுள் நுழைந்ததும் களத்தில் கைபோட்டு இருப்பது நாட்டிற்காக ஆடுவதனை கருத்தில் கொண்டேயாகும்”.
என திலகரத்ன டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.