இன்றைய போட்டியில் மாறவுள்ள இலங்கை அணியினர்..

இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு20 போட்டியானது இன்று(06) நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

ஒருநாள் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தனுஷ்க குணதிலகவிற்கு அணியில் வாய்ப்புக் கிட்டவில்லை. அதற்குப் பதிலாக நடுநிலை  வீரரான குசல் பெரேரா ஆரம்ப துடுப்பாட்டராக களமிறங்கவுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, ஒருநாள் போட்டிகள் இரண்டில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அசத்திய தனஞ்சய சில்வா இன்றைய போட்டியில் நடுநிலை வீரராக களமிறங்கவுள்ளார்.

இல 03 குசல் மென்டிஸ் இற்கும் இல 04 தினேஷ் சந்திமால் இற்கும் உபாதைக்குள்ளாகியுள்ள ஏஞ்சலோ மேத்யூஸ் இனது இடத்திற்கு இல 05 சாமர கபுகெதர ஆகியோர் விளையாடவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபடுகின்றது.

நெடுநாட்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு இருபதுக்கு20 போட்டியில் பந்து வீச சசித்ர சேனாநாயக்க உள்வாங்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது. மேலும் சுழற் பந்து வீச்சாளர் சீக்குகே பிரசன்னவும் இன்றைய போட்டியில் பங்கேற்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆல்ரவுண்டர் வேக பந்து வீச்சாளர்களான திசர பெரேரா மற்றும் தசுன் சானக ஆகிய வீரர்கள் இருவரில் திசர பெரேரா அநேகமாக பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலக்கை சுழற் பந்துவீச்சாளரான சச்சித் பத்திரன மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோரில் சச்சித் பத்திரன ஆடவுள்ளார் எனவும் கிரிக்கெட் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.