பிரிட்டிஷ் எயர் வேஸ் விமான சேவையின் கணினி வலையமைப்பில் கோளாறு!

பிரிட்டிஷ் எயர் வேஸ் விமான சேவையின் கணினி வலையமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பல மணி நேர தாமத்த்தை எதிர் நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனின் ஹித்ரோ கற்விக் விமான நிலையங்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயணிகளின் விமான பயணச்சீட்டுகளை சரிபார்க்க முடியாது விமான சேவையின் கணினி கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கடந்த பல மணி நேரமாக நீடிக்கும் இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, பிரிட்டிஷ் எயர் வேஸ் பணியாளர்கள் கைகளால் எழுதிய விமானத்தில் ஏறுவதற்கான அட்டைகளை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.