நாங்களே மிகச் சரியானவர்கள்! வாதிடும் மஹிந்த

நாங்களே மிகச் சரியானவர்கள்! வாதிடும் மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்பொழுதுள்ளவர்களை விடவும், நாமே மிகச் சரியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து எனது தந்தை டீ.ஏ. ராஜபக்ச கட்சியை அமைத்தவர் ஆவார். எனினும், இன்று அதனை மறைக்கின்றார்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அனுராதபுரத்திலுள்ள முக்கிய விகாரைகளில் சமயக் கிரியைகளை நிறைவு செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எம்முடன் உள்ளவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டதன் பின்னர் நாம் எங்கே செல்வது?

எம்முடன் உள்ளவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்துக்கு செல்வதில்லையென தீர்மானம் எடுத்ததன் பின்னர், எனக்கு அதனை உடைத்துக் கொண்டு கட்சியின் கூட்டத்துக்கு செல்ல முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.