பலாலி விமானத்தளம் இந்திய உதவியுடன் புனரமைக்கப்படுகிறது..?

பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தமொன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதா என நேற்று(06) பாராளுமன்றத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.

பிரதமர் அதற்கு பதிலளிக்கையில், பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.