பாரத லக்ஷ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு நாளை..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு நாளையதினம்(08) வழங்கப்படவுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, பத்மினி ரணவக்க குணதிலக, சீ.பீ.எஸ்.மொராயஸ் ஆகிய மூவர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் ஊடாக குறித்த இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், இந்த வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி அங்கொட பிரதேசத்தில் வைத்து பாராத லக்ஷ்மன் உள்ளிட்டோர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.