கோடி பெறுமதியான போதைப்பொருள் கொண்டுவந்த இந்தியரை விசாரிக்க அனுமதி (Update)

ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளினை கொண்டு வந்து கைதாகிய இந்திய நாடுப்பிரஜையினை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க மீகமுவ மகேஸ்திராத் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

—————————————————————————————————————————–

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து 31 வயதுடைய நபர் ஒருவரே குறித்த ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு வந்துள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இருந்து இலங்கை வந்துள்ள விமானத்தில், குறித்த போதைப்பொருட்களை ஆடையினுல் மறைத்து கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு கிலோ 4 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஆடைகள் கொண்டு வரும் நபர் என அறியவந்துள்ளது.