வெளியாரின் பங்களிப்பு இல்லாவிடின் 3 நிறுவனங்களும் மூடப்படும் – பிரதமர் எச்சரிக்கை.

மத்தள விமான நிலையம், சிறிலங்கன் விமான நிறுவனம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய மூன்றும் நட்டத்தில் இயங்குவதால், வெளியாரின் பங்களிப்பு இல்லாவிடின் அவை மூடப்படும் நிலைக்குத்  தள்ளப்படலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றில், ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன் குறித்த  இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை  பொதுமக்களுக்கு கடத்துவது முறையானதொன்றல்ல என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.