தீர்ப்பின் பிற்பாடு வெலிக்கட சென்ற துமிந்த மீண்டும் பாரதூரமான குற்றத்தில்..

பாரத லக்ஷமன் கொலை வழக்கின் தீர்ப்பின் பிற்பாடு வெலிக்கட சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட துமிந்த சில்வா தவிர்ந்த மற்றைய மூவரும் அந்நேரமே மரண தண்டனை வழங்கப்பட்டோர் அணியும் ஆடைகளை அணிந்துள்ளதுடன், துமிந்த சில்வா மட்டும் நேராக சிறைச்சாலை அதிகாரியின் காரியாலயத்திற்கு சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

மரண தண்டனை பெறப்பட்ட எந்தவொரு சிறையாளியும் சிறைச்சாலை தவிர்ந்த எந்தவொரு இடத்திற்கும் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சிறைச்சாலை அதிகாரியின் காரியாலயத்தில் சுமார் ஒரு மணி நேரம் வரையில் இருந்து, பிற்பாடு துமிந்த சில்வா தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆடையினை அணிந்தவாறு சிறைக்குச் சென்றுள்ளதாக மேலும் அறிய முடிகிறது.