முன்னாள் அமைச்சர் ரோஹிதவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு வெளிநாடு செல்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவருக்கான இந்த அனுமதி உயர்நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்னவால் இன்று(09) வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4.3 மில்லியன் பணத்தினை சட்டவிரோதமாக சம்பாதித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ரோஹித அபேகுணவர்த்தன தனக்கு வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரியிருந்தார்.

அதற்கமைய இந்த மாதம் 25ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 25ஆம் திகதி வரை இவருக்கான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.