நாளை மறுதினத்திற்கு முன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யாவிடின் மாபெரும் போரட்டமொன்றிற்கு தாம் தயார் என சிங்கள ராவய அமைப்பு கூறியுள்ளது.
அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் கூறுகையில், வில்பத்து அபய பூமியினையும், மடுப் பிரதேசத்தின் காடழிப்பு தொடர்பாகவும் இன்னும் சாதகமான முடிவொன்றினை எட்டாத நிலையில், நாளை மறு தினத்திற்கு முன் அமைச்சரை கைது செய்யாவிடின், FCID இற்கு முன்பாக தாம் அணி திரள தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.