பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது – சாரதிகளுக்கு வேண்டுகோள்..

ஐக்கிய தேசிய கட்சியின் 70 வது ஆண்டு நிறைவு விழா காரணமாக தெமட்டகொட மேம்பாலத்தில் இருந்து பொரளை சந்தி வரையான பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆண்டு நிறைவு விழா இடம்பெறும் கெம்பல் மைதானத்திற்கு பிரவேசிக்கக்கூடிய புஞ்சி பொரளை மற்றும் ஓவல் மைதானத்திற்கு அருகில் உள்ள வீதிகளும் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று முற்பகல் தொடக்கம் ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா நிறைவுறும் வரையில் இந்த வீதிகள் மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதிகளை பாவிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.