டில்ஷான் இனது “இறுதிக் கோரிக்கை..” இதுதான்..

17 வருடமாக தமக்கு வழங்கிய ஒத்துழைப்பினைப்போன்றே தற்போதுள்ள இளம் வீரர்களுக்கும் வழங்குமாறு இலங்கை அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான திலகரத்ன டில்ஷான் அனைவரிடமும் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

நேற்றையதினம்(09) நடைபெற்ற டில்ஷானின் இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நிறைவிலேயே குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு இருபது  போட்டியானது நேற்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.டில்ஷானின் பிரியாவிடைக்காக வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள்  மத்தியில் டில்ஷான் அனைவரையும் நினைவூட்டி நன்றி செலுத்தினார்.

தனது திறமைகளை ஊக்கப்படுத்தும் ரசிகர்களுக்கு சலூட் அடித்து தனது மரியாதையினை தெரிவுபடுத்தவும் டில்ஷான் மறக்கவில்லை.

எவ்வாறாயினும், டில்ஷானின் இறுதி சர்வதேச போட்டியினை வெற்றிக்கு இட்டு செல்ல அணியினரால் முடியாது போனது.

அது, இலங்கைக்கு எதிராக ஆஸி அணி வீரர் க்ளேன் மக்ஸ்வெல் இனது அதிரடி ஆட்டத்தினால் ஆகும்.