விமல் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவங்ச இன்று(14) நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இவர் அமைச்சராக இருந்த காலத்தில், இலங்கை பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வாகன பயன்பாட்டில் முறைகேடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே இவர் இவ்வாறு இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகின்றது.