பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் நியுசிலாந்துக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம்திகதி முதல் 3ம் திகதி வரையில் அவர் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நியுசிலாந்து விஜயம் தொடர்பில் மகிழ்சியடைவதாக, ஜோன் கீ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பிரதமர் ஒருவர் நியுசிலாந்துக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.