வற் வரி அதிகரிப்பு தொடர்பான சட்ட மூலத்திற்கு எதிராக ஜே.வி.பி சிவப்பு சமிஞ்சை.

அரசினால் அண்மையில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வற் வரி அதிகரிப்பு தொடர்பான சட்ட மூலத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் பாராளுமன்றத்தில் இந்த சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

இன்று(16) கொழும்பில் நடைபெற்ற அந்தக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சாதாரண மக்கள் மீது மேலும் வரிச்சுமைகளை அதிகரிக்கும் வகையிலேயே குறித்த இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை தாம் ஏற்றுக்கொள்ள மாட்டோமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.