ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட இலங்கை தூதுக்குழுவினர் நாளை(18) அமெரிக்கா செல்லவுள்ளனர்.
நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள குறித்த இந்த கூட்டம் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 21ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.