ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொது மாநாட்டின் விவாதம் இன்று(20) ஆரம்பமாகிறது.
குறித்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 140 நடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த முறை மாநாட்டில் உலக நாடுகள் முகம் கொடுத்துள்ள அகதிகள் பிரச்சினை, மத்திய கிழக்கு நாடுகளில் சமாதானத்தை ஏற்படுத்தல், வறுமை ஒழிப்பு, நோய்பரவல் தடுப்பு மற்றும் பட்டினி ஒழிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், இம்மாநாட்டில் நாளையதினம்(21) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது உரையை நிகழ்த்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.