மிஹின் லங்கா வழக்கில் முன்னாள் பா.உ சஜினுக்கு பிணை..

மிஹின் லங்கா நிறுவனத்துடன் 833 மில்லியன் கொடுக்கல் வாங்கலின் போது அரசுக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்திய வழக்கிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று(20) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரண்டரை லட்சம் ரொக்கப் பிணையிலும், பத்து லட்சம் சரீரப் பிணை நான்கிலும் இவருக்கு பிணை வழங்கி நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

சஜின் வாஸுக்கு எதிரான வழக்கானது லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.