அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயல்களை அங்கீகரிக்க முடியாது – கல்வியமைச்சர்

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயல்களை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

நேற்று(20) நாடாளுடன்றத்தில் அந்த சங்கத்தின் கோரிக்கை தொடர்பாக விஷேட உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் நலிந்த ஹேரத் வசிப்பிடத்தை மாற்றிய பின்னர் அவரது தொழில் நிலையை பயன்படுத்தி மகனை ரோயல் கல்லூரியில் சேர்த்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.