மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் அன்ட்ரே றசல், ஊக்கமருந்துச் சோதனைகளைத் தவறவிட்டார் என்பது தொடர்பான விசாரணை, செப்டெம்பர் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
12 மாதகாலப் பகுதிக்குள், அவருக்கு நடக்கவிருந்த ஊக்கமருந்துச் சோதனைகள் மூன்றை, அவர் தவறவிட்டிருந்தார் என, ஜமைக்காவின் ஊக்கமருந்துக்கெதிரான ஆணைக்குழு குற்றஞ்சாட்டியிருந்தது.
இவ்வாறு 12 மாதங்களுக்குள் 3 சோதனைகளைத் தவறவிடுவது, ஊக்கமருந்துச் சோதனையொன்றில் தோல்வியடைவதற்கு ஒப்பானதாகும்.
எனவே, இது தொடர்பான விசாரணை நடத்தப்படவிருந்தது. இந்நிலையில், இது தொடர்பான அமர்வொன்று, கடந்த திங்கட்கிழமையன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, றசலுக்காக வாதாடிய சட்டத்தரணி, குறித்த காலத்தில் 3 சோதனைகளை றசல் தவறவிட்டார் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு, குற்றஞ்சாட்டும் தரப்பினருக்கு உண்டு என்று வாதாடினார்.
இது தொடர்பான வாதங்களையடுத்து, எதிர்வரும் 28ஆம் திகதிக்கு மேலதிக வாதங்கள் ஒத்திவைக்கப்பட்டதோடு, அது, ஒக்டோபர் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.