வாஷிங்டன் துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி..

அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

 வாஷிங்டன் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் கஸாகேட் மால் என்ற பிரபல வணிக வளாகம் உள்ளது இலங்கை நேரப்படி இன்று(24) காலை எட்டு மணியளவில் குறித்த வளாகத்துக்குள் நுழைந்த ஒரு மர்ம நபர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் வெறித்தனமாக சுட்டுத் தள்ளியுள்ளான்.

இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் இச்சம்பவத்தின்போது அங்கிருந்து தப்பிப் பிழைத்து வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்தை பொலிசார் வந்தடைவதற்குள் கொலையாளி தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

கொலையாளியை நேரில் கண்டவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் பர்லிங்டன் நகர பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.