அண்மையில் மிகவும் பரவலாக பேசப்படும் கருப்பொருளாகவும் படைப்பாகவும் இருப்பது இராஜ் இனது “சூடான இரவு” எனப்படும் காணொளி உடன் கூடிய இசைப்படப்பாகும்.
இது குறித்து பூஜிதரான பிடிதுவே சிரிதர்ம சுவாமி அவர்கள் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையில்,
மேற்குறித்த “சூடான இரவு – Giniyam Rae” எனப்படும் இசைத்தொகுப்பினை பற்றி கதைக்க முன்னர் நாம் சீகிரிய ஓவியம் குறித்து நமது கவனத்தினை செலுத்த வேண்டும்
அவ்வாறே, கலையினை கலையின் நோக்கில் நோக்க வேண்டும். கலையினையும் காமத்தினையும் கலந்து நோக்கக் கூடாது. அவ்வாறு காமத்துடன் நோக்கும் போது தான் எல்லாமே தப்பாக உணரப்படும்.
சம்பிரதாயமாக பெரியளவில் ராம் இட்டு வைப்பதை விட, இலங்கையின் படைப்பாக புதுமுக படைப்புக்கள் வெளிவருவதில் என்ன தவறு..? அவ்வாறான படைப்புக்கள் வெளியாவது வரவேற்கத்தக்கது. இவ்வுலகில் உள்ள மனிதர்கள் விசித்திரமானவர்கள் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், இராஜ் இனது மற்றுமொரு காணொளி குறித்தும் மேற்குறித்த தேரர் ஆதரவு வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=TTC0_UIsImI” width=”560″ height=”315″]