
எட்கா உடன்படிக்கைக்கு தேவையான உரிய படிமுறைகளை விரைவில் நிறைவு..
எட்கா உடன்படிக்கைக்கு தேவையான உரிய படிமுறைகளை விரைவில் நிறைவு செய்வதற்கு அரசு எதிர்பார்ப்பதாக அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாரமனுடன் இணைந்து நேற்று(27) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
அதன்படி அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அது கையொப்பமிடப்பட வேண்டும் என்றும், அவ்வாறில்லாமல் விரைவாக ஒப்பமிடும் தேவை இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
காலவரையறை தடை, அழுத்தங்கள் இன்றி அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இருதரப்பு ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அது இருக்க வேண்டும் என்று இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன் மேலும் தெரிவித்திருந்தார்.