சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 67 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சீன தூதரகம் இன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார கலந்து கொண்டுள்ளார்.
அத்துடன் இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் Yi Xianliang உள்ளிட்ட பல முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சபாநாயகர் கரு ஜயசூரிய,முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வின் போது பல சீனக் கலைஞர்கள் இணைந்து தங்களது கலாச்சார நடனங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
நாட்டில் பரபரப்பாக பல விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவர்களுடைய இந்த கலந்துரையாடலானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், இவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்று ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துள்ளதாகவும் தவல்கள் வெளியாகி உள்ளன.