பொலிஸ்மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில்..

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவினால் பொலிஸாருக்கு எதிராக அண்மையில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்த நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று(29) அழைப்பு விடுத்துள்ளது.

வீதிப் போக்குவரத்துக்களில் தனியார் பஸ்கள் ஈடுபடுகின்றபோது பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பாக கெமுனு விஜேரத்ன தனது முறைப்பாட்டில் விமர்சித்திருந்தார். இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடு இன்று வியாழனன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையிலேயே பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும், போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பாளராக கடமைபுரியும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.