நீதிமன்ற சட்டத்திலும் தில்லுமுல்லாடும் யோஷிதவும் காதலியும்..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் எனக் கோரி, கடந்த வாரம் மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார்.

அந்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் உடல்நல காரணங்களை முன்னிட்டு யோஷிதவுக்கு அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் யோஷிதவுக்கு தனது காதலியை பார்ப்பதற்காகவே அவுஸ்திரேலியா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் அனுமதி கிடைத்ததனை தொடர்ந்து யோஷித தனது நண்பர்களிடம் “நான் கொடுத்த கயிரை உயர் நீதிமன்ற நீதிபதி சாப்பிட்டு விட்டார்…. எனக் கூறியுள்ளார்.

யோஷித ராஜபக்ஷவின் காதலியான, லொஹான் ரத்வத்தேயின் மகள் தற்போது அவுஸ்திரேலியாவின், மெல்போர்னில் உயர் கல்வியை மேற்கொண்டு வருகின்றார்.

யோஷித ராஜபக்ஷ அவுஸ்திரேலியா நோக்கி செல்வதற்கான விசா விண்ணப்பம் செய்துள்ளார். இந்த வாரத்திற்குள் அவர் அவுஸ்திரேலியா நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மேலும் தெரிய வருகிறது.

பண தூய்மையாக்கல் சட்டத்தின் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த யோஷிதவுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.