பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம், சபைத்தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சீர்த்திருத்தச் சட்ட மூலம் இன்று நாடாளுமன்றில்..
வற் எனப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சீர்த்திருத்தச் சட்ட மூலம் இன்று(04) நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
குறித்த இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் இரண்டாம் சந்தர்ப்பம் இதுவாகும்.
முன்னரே இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டிருந்த போதும், இது அரசியலமைப்புடன் ஒன்றித்து செல்லவில்லை என்பதால், உயர் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து சீர்த்திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலத்துக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகிறது.
அதேநேரம், இன்று(04) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த விகாரைகள் சட்ட மூலம் மற்றும் தேரவாத பிக்குகள் சட்ட மூலம் என்பன, திகதி அறிவிப்பு இன்றி பிற்போடப்பட்டுள்ளன.