வரி அதிகரிப்பு மற்றும் அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தல் என்பனவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 20 தொழிற்சங்கங்கள் இன்று(05) மாலை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், இலங்கை ஆசிரியர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், அரச அச்ச கலைஞர்கள் சங்கம், இலங்கை அரச சுகாதார சங்கம், ஐக்கிய பொது சேவை சங்கம், கூட்டு வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் மற்றும் வர்த்தக, தொழில் சேவையாளர் சங்கம் உட்பட பல சங்கங்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன.
தொழிலாளர்கள், அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு காரணமாக நெருக்கடிக்குள்ளாகி வருவதாகவும், இதனால், மக்கள் மீது தொடுக்கப்படும் மறைமுக தாக்குதலை நிறுத்துமாறும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை கோரியுள்ளன.
இன்று மாலை 4.00 மணிக்கு கொழும்பு கோட்டை அரச மரத்தடி சந்தியிலிருந்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது